அரசுடன் ஒட்டி இருந்து கொண்டு குறை கூறாதீர்கள் ! சிங்கள எம்பியிடம் வாயை கொடுத்து வாங்கி கட்டிய சிறிதரன்
இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் வாயை கொடுத்து சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அழுத்கமவிடம் வசமாக வாங்கி கட்டியுள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது சிறிதரன் வடக்கு கிழக்கில் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறுவதன்காரணமாக வவுனியா மன்னர் முல்லைத்தீவு கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவடையும் அபாயம் இருக்கிறது என்று குற்றம் சாட்டினார் .
மேலும் , தமிழ் தேசிய கூட்டமைப்பு பல்வேறு சந்தர்ப்பங்களில் நல்லாட்சி அரசுக்கு ஆதரவளித்து இருக்கிறது .ஆனால் அரசாங்கம் வடக்கு கிழக்கிற்கு உருப்படியாக எதுவும் செய்யவில்லை என்று குற்றசாட்டுகளை அடுக்கினார் .
சிறிதரனின் கருத்துகளினால் கடுப்பாகிய மஹிந்தானந்த அழுத்கம இடையில் குறுக்கிட்டு , நீங்கள் அரசுடன் கூடவே ஒட்டி இருந்து கொண்டு அரசாங்கத்தினை குறை கூறாதீர்கள் என்று பதிலடி கொடுத்தார்.இதனால் மஹிந்தானந்த அழுத்கம மற்றும் சிறிதரன் ஆகியோருக்கு இடையில் சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது .
நிபந்தனைகள் எதுவும் இன்றி மைத்திரிக்கு ஆதரவளித்து நல்லாட்சி அரசு உருவாகுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது யாவரும் அறிந்த விடயம் .காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்னை , சிங்கள குடியேற்றங்கள் , தீர்வு திட்டம் போன்ற அனைத்து பிரச்சனைகளையும் நல்லாட்சி அரசு செவிசாய்க்காமல் இருந்து வரும் நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் நல்லாட்சி அரசுக்கு ஆதரவளித்து வருகின்றது .
நல்லாட்சி அரசின் கைப்பொம்மையாக இருந்துகொண்டு நல்லாட்சி அரசுடன் ஒட்டி உறவாடிக்கொண்டு நல்லாட்சியை விமர்சித்தால் அனைவருக்கும் கோபம் வரத்தான் செய்யும் ,ஆகவே மஹிந்தானந்த அழுத்கம தெரிவித்தமை ஏற்றுக்கொள்ளக்கூடியது .வாயை கொடுத்து வாங்கி கட்டிய சிறிதரனுக்கு எப்பொழுது தான் ஞானம் பிறக்க போகின்றதோ தெரியவில்லை .