இரகசியத்தை போட்டுடைத்த அமலா பால் !வெட்கத்தில் புன்னகைத்த மாதவன்

0

நடிகை அமலாபால், சிறு வயதுமுதலே மாதவனை காதலித்து வந்ததாக ஒரு விழாவில் கூறியுள்ளார்.

நடிகர், நடிகைகள் படங்களில் மட்டுமல்லாது தங்களது நிஜ வாழ்க்கையிலும் காதலித்து வருகிறார்கள். இதில் முக்கால்வாசி பேர் முதல்காதல் அனுபவத்தை கடந்து வந்தவர்களாகத்தான் உள்ளார்கள்.

இது பல படங்களிலும் வந்துள்ளது. நடிகை அமலாபால் இயக்குனர் விஜய்யை காதலித்து மணந்தார். பிறகு கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்தனர். இது அமலாபாலின் 2வது காதல் என்பது தெரியவந்திருக்கிறது.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை அமலாபால் தனக்கு ஏற்பட்ட முதல் காதல் அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். அவரது முதல் காதலன் வேறு யாருமல்ல நடிகர் மாதவன்தானாம்.

இந்த காதல் சம்பவம் பற்றி அமலாபால் க;றுகையில்; ‘‘எல்லோருக்கும் வாழ்வில் முதல் காதல் வந்திருக்கும். எனக்கும் முதல் காதல் இருந்தது. நான் காதலித்தது வேறுயாரையுமல்ல.. நடிகர் மாதவனைத்தான். சிறுவயதிலிருந்தே அவர் மீது எனக்கு காதல் உண்டு’’ என்றார் அமலாபால். நடிகர் மாதவனை அருகில் வைத்துக்கொண்டே அப்படியொரு வார்த்தையை அமலாபால் கூறினார். அவர் கூறியதை கேட்டு நடிகர் மாதவன் புன்னகைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.