சுவிஸர்லாந்தின் தடுப்பு முகாமில் இலங்கை பெண்ணொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் .சுவிஸர்லாந்தின் பசல் யூனிஸ்பிட்டல் என்னும் பகுதியில் உள்ள வாகாப் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணே தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
வாகாப் தடுப்பு முகாமில் கடந்த செவ்வாய்க்கிழமை இந்தப்பெண் சிறையில் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார் .எனிலும் முகாமில் உள்ளவர்கள் பெண்ணை காப்பாற்றி இருந்தனர் .கடுமையான காயங்களுக்கு உள்ளாகிய பெண் ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனிலும் சிகிச்சை பலனளிக்காமல் இரண்டு நாட்களின் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றனது.
29 வயதான இந்த இலங்கை பெண் சுவிஸர்லாந்தில் புகலிடம் கோரி விண்ணப்பித்திருந்தார் .கடந்த மே மாதம் புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் தப்பிச் செல்ல முயற்சித்த பெண்ணை சனிக்கிழமை பேர்ண் நகரில் வைத்து பொலிஸார் கைது செய்தனர் .அதன் பிறகு கடந்த திங்கட்கிழமை பசல் பிராந்தியத்தில் உள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதே இவர் தற்கொலை செய்துள்ளார் .