இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஆலோசகராக பணியாற்றுமாறு இலங்கை கிரிக்கெட் சபை விடுத்த கோரிக்கையை இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் மஹேல ஜெயவர்த்தன நிராகரித்துள்ளார் .
இது குறித்து மஹேல ஜெயவர்த்தன தனது டுவிட்டர் பக்கத்தில் ,தெரிவுக் குழு மீதும், விளையாட்டுத்துறை அமைச்சர் மீதும் கொண்ட மரியாதை நிமித்தம் ஓராண்டு தெரிவு குழுவிலும், 6 மாதங்கள் சிறப்பு ஆலோசனை குழுவிலும் பணியாற்றியுள்ளேன்.ஆனால் நான் குறிப்பிட்ட எந்த பரிந்துரைகளையும் கிரிக்கெட் சபை செயல்படுத்தவில்லை . இனிமேலும் வீணாக எங்களை தொல்லை செய்ய வேண்டாம் எனவும் மஹேல கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் முன்னர் தாம் அளித்த பரிந்துரைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில், தமக்கு அந்த அமைப்பின் மீது எந்த நம்பிக்கையும் இல்லை எனவும் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
மஹேலவின் இந்த நிராகரிப்பு கிரிக்கெட் சபையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாம் .இலங்கை கிரிக்கெட்டில் தற்போது அரசியல் புகுந்து விளையாடுவதன் காரணமாகவே அணியின் முன்னாள் வீரர்கள் ஒதுங்கி இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது .