19 வயதுக்கு உட்பட்ட இலங்கை கிரிக்கெட் தேசிய அணியில் யாழ். மாவட்டத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் இடம்பிடித்து தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.
19 வயதுக்கு உட்பட்ட இந்திய இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி தொடர் ஆரம்பமாக உள்ளது .இந்த தொடரில் விளையாடுவதற்கு யாழ் மத்திய கல்லூரி வீரர்களான மதுஷன் மற்றும் விஜாஸ்காந் ஆகியோர் தேர்வுசெய்ய பட்டுள்ளனர் .
இந்த இரண்டு இளைஞர்களும் வடமாகாண அணி சார்பில் சிறப்பாக பிரகாசித்ததன் காரணமாகவே இவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது . இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த இருவரும் சிறப்பாக விளையாடி எதிர்வரும் காலத்தில் முரளிதரன் போன்று தேசிய அணியில் விளையாடி பெருமை சேர்க்க வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பு .
மதுஷன் மற்றும் விஜாஸ்காந் ஆகிய இருவருக்கும் ஈழம் நியூஸ் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமிதம் அடைகின்றது .