உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் எகிப்தை எட்டி உதைத்த உருகுவே

0

FIFA என்று அழைக்கப்படும் உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் ரஷ்சியாவில் இடம்பெற்று வருகின்றன.நேற்றைய தினம் ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ள எகிப்து – உருகுவே அணிகள் ஒன்றுக்கொன்று மோதின.இலங்கை நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமானது .

ஆட்டம் தொடங்கியது முதல் உருகுவே அணி வீரர்கள் மிகவும் சிறப்பான முறையில் விளையாடினார்கள். அவர்களின் ஆட்டத்திற்கு சற்றும் சளைக்காமல் எகிப்து அணி ஈடுகொடுத்து விளையாடியது . இதனால் முதல்பாதி நேர ஆட்டம் கோலின்றி முடிவடைந்தது.

2-வது பாதி நேரத்திலும் உருகுவே அணியினால் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டம் முடிய இரண்டு நிமிடங்களே இருந்ததால் போட்டி சமநிலையில் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 89-வது நிமிடத்தில் வலது பக்கம் கார்னர் பகுதியில் இருந்து உருகுவே அணிக்கு ப்ரீஹிக் வாய்ப்பு கிடைத்தது. கார்லோஸ் சான்செஸ் பந்தை தூக்கி அடிக்க மரியா கிமேனெஸ் தலையால் முட்டி கோலாக்கினார். இதனால் உருகுவே 1-0 என முன்னிலைப் பெற்றது.

அதன்பின் காயத்திற்கான நேரம் கணக்கிட்டு 5 நிமிடம் கூடுதலாக வழங்கப்பட்டது. இந்த நேரத்தில் எகிப்பு அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் உருகுவே 1-0 என வெற்றி பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.