உலகக்கிண்ண கால்பந்தாட்டம் ! 60 வருட மோசமான சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்வீடன்

0

21 வது பிபா உலக கிண்ண போட்டிகள் ரஷ்சியாவில் நடைபெற்று வருகின்றது .நேற்றையதினம் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தென்கொரியா மற்றும் ஸ்வீடன் அணிகள் மோதிக்கொண்டன .

போட்டியின் முதல்பாதி நேரத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. ஆனால்இ அதிக அளவில் தவறு செய்தனர். இந்த உலகக் கோப்பையில் இதுதான் அதிக தவறுகள் செய்த போட்டியாக அமைந்தது.

2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 65-வது நிமிடத்தில் ஸ்வீடனுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி அந்த அணியின் அட்ரியாஸ் கிராங்க்விஸ்ட் கோல் அடித்தார். அதற்கு தென்கொரியாவில் பதில் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஸ்வீடன் 1-0 என வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஸ்வீடன் 60 வருடகால மோசமான சாதனை ஒன்றை தகர்த்துள்ளது .1958-ம் ஆண்டிற்குப் பிறகு ஸ்வீடன் அணி தொடக்க போட்டியில் வெற்றி பெற்றது கிடையாது.நேற்று தென்கொரியாவினை வீழ்த்தியதன் மூலம் இந்த மோசமான சாதனைக்கு ஸ்வீடன் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இதேவேளை கடந்த 1998-ம் ஆண்டிற்குப் பிறகு தென்கொரியா தொடக்க போட்டியில் தோல்வியை சந்தித்ததே கிடையாது. இந்த சாதனையை நீடிக்கும் நோக்கில் தென்கொரியா களமிறங்கிய போதும் அது கைகூடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

Leave A Reply

Your email address will not be published.