உலகக்கிண்ண கால்பந்தாட்டம் ! பனாமாவை பந்தாடிய இங்கிலாந்து

0

FIFA என்று அழைக்கப்படும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ‘ஜி’ பிரிவில் இடம்பிடித்துள்ள இங்கிலாந்து அறிமுக அணியான பனாமாவை எதிர்கொண்டது.

பலம் வாய்ந்த இங்கிலாந்து தொடக்கம் முதலே கோல் மழை பொழிந்தது. ஆட்டத்தின் 8-வது நிமிடத்தில் ஸ்டோன்ஸ் முதல் கோலை பதிவு செய்தார். 22-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி கேப்டன் ஹாரி கேன் கோல் அடித்தார்.

36-வது நிமிடத்தில் லிங்கார்டு கோல் அடித்தார். 40-வது நிமிடத்தில் ஸ்டோன்ஸ் மேலும் ஒரு கோல் அடித்தார். 45-வது நிமிடம் முடிந்து காயத்திற்கான நேரத்தின் முதல் நிமிடத்தில் மற்றொரு பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஹாரி கேன் கோல் அடித்தார். இதனால் இங்கிலாந்து முதல் பாதி நேரத்தில் 5-0 என முன்னிலைப் பெற்றது.

2-வது பாதி நேரத்திலும் இங்கிலாந்து கையே ஓங்கியது. 62-வது நிமிடத்தில் ஹாரி கேன் மேலும் ஒரு கோல் அடித்தார். ஹாரி கேனின் ஹாட்ரிக் கோலால் 62-வது நிமிடத்தில் இங்கிலாந்து 6-0 என முன்னிலைப் பெற்றது. 62-வது நிமிடத்தில் கோல் அடித்ததும் ஹாரி கேன்இ லிங்கார்டு உள்பட முன்னணி வீரர்கள் வெளியேறினார்கள்.

அதன்பின் இங்கிலாந்து ஆட்டத்தில் சற்று வேகம் குறைந்தது. இதை பயன்படுத்தி பனாமா 78-வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்தது. ப்ரீ ஹிக்கை பயன்படுத்தி அடித்த பந்தைஇ கோல் எல்லைக்குள் வைத்து பலோய் காலால் உதைத்து கோலாக்கினார்.

அதன்பின் இரு அணிகளும் கோல் அடிக்காததால் இங்கிலாந்து 6-1 என வெற்றி பெற்றது. முதல் ஆட்டத்தில் 2-0 என வெற்றி பெற்றிருந்ததால்இ இரண்டு வெற்றியுடன் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

Leave A Reply

Your email address will not be published.