உலக கிண்ண கால்பந்தாட்டத்தில் நடப்பு சம்பியனை வீழ்த்திய மெக்சிகோ

0

FIFA உலக கிண்னண கால்பந்தாட்ட போட்டிகள் ரஷ்சியாவில் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்று வருகின்றது .நேற்றைய தினம் நடப்பு சாம்பியனான ஜெர்மனி மற்றும் மெக்சிகோ அணிகள் மோதின .இந்த போட்டியில் ஜெர்மனி இலகுவாக மெக்சிகோவினை வீழ்த்தும் என்று பலரும் எதிர்பார்த்தனர் .ஆனால் ஜெர்மனியை வீழ்த்தி மெக்சிக்கோ அதிர்ச்சி வைத்தியம் அளித்தது .

இரவு 08.30 – இரு நாடுகளின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

இரவு 08.36 – இதோ! உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மாபெரும் போட்டி தொடங்கியது.

இரவு 08.46 – ஜெர்மனி அணிக்கு ஒரு அருமையான கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது கோல் தான் என்று ஒரு நொடி ரசிகர்கள் நினைக்க, மெக்சிகோ அணி அதை சிறப்பாக தடுத்தது.

இரவு 09.00 – ஜெர்மனி வீரர் கிம்மிச்-க்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

இரவு 09.06 – மெக்சிகோவின் லொசானோ அற்புதமான கோல் அடித்தார். ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் இந்த கோல் விழுந்தது. இதனால், மெக்சிகோ 1-0 என முன்னிலை பெற்றது .

இரவு 09.18 மணிக்கு இந்த போட்டியின் முதல் பாதி ஆட்டம் முடிந்த போது மெக்சிகோ 1-0 என முன்னிலை வகித்தது .

இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய சிறிது நிமிடத்திலேயே மெக்சிகோ அணிக்கு இரண்டாவது கோல் அடிக்க நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால், மெக்சிகோ அதனை தவற விட்டது .

மெக்சிகோ அணி கோல் அடிப்பதை காட்டிலும், ஜெர்மனி கோல் அடிப்பதை அரண் போல் நின்று தடுத்தமையை காண முடிந்தது .போட்டியின் இறுதியில் மெக்சிகோ அணி உலக சாம்பியன் ஜெர்மனி அணியை 1-0 என வீழ்த்தி வெற்றி பெற்றது . மெக்சிகோவின் இந்த எதிர்பாராத வெற்றி ஜேர்மன் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாம் .

Leave A Reply

Your email address will not be published.