உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் சவுதிக்கு சவுக்கடி கொடுத்த ரஷ்சியா

0

21 வது உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் ரஷ்ஷியாவில் இடம்பெற்று வருகின்றது .4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த கால்பந்தாட்ட திருவிழா 2016 இல் பிரேசிலில் இடம்பெற்று இருந்தது .இதில் ஜேர்மன் அணி உலக கிண்ணத்தினை கைப்பற்றி வாகை சூடியிருந்தது .

நேற்றிரவு 8 மணிக்கு 21 வது உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் ரஷ்ஷியாவில் கோலாகலமாக ஆரம்பமாகியது .இங்கிலாந்தின் பிரபல பாப் பாடகர் ராப்பி வில்லியம்ஸ் இசை விருந்து அளித்தார். அப்போது பிரேசில் முன்னாள் வீரர் ரொனால்டோ பந்தை உதைத்து போட்டியை தொடங்கி வைத்தார். அதன்பின் ஜிம்னாஸ்டிக்ஸ் கலைஞர்களின் சாகசமும் நடைபெற்றது.

நேற்றைய போட்டியில் சவுதி அணி ரஷ்சியாவுடன் பலப்பரீட்சை நடத்தியது .போட்டி ஆரம்பித்த 12-வது நிமிடத்தில் ரஷியா அணியின் கசின்ஸ்கீ கோல் அடித்தார். அதைத்தொடர்ந்து 43-வது நிமிடத்தில் டென்னிஸ் செரிஷேவ் இரண்டாவது கோல் அடித்தார். இதனால் முதல்பாதி நேர ஆட்டத்தில் ரஷியா அணி 2-0 என முன்னிலை பெற்றது.தொடர்ந்து நடந்த இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 71-வது நிமிடத்தில் ரஷியா அணியின் டிசியூபா கோல் அடித்தார். இறுதிநேர ஆட்டத்தில் ரஷியாவின் டென்னிஸ் செரிஷேவ் தனது இரண்டாவது கோலை அடித்தார். அதன்பின் ரஷியாவில் கோலோவின் மேற்கொண்டு ஒரு கோல் அடித்தார். சவுதி அரேபியா அணியினர் இறுதிவரை முயன்றும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இறுதியில் ரஷியா அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 3 புள்ளிகளை தட்டிச்சென்றது.

ரஷ்ஷிய மற்றும் சவுதி அணிகளுக்கு இடையிலான போட்டியை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சவுதி அரேபியா இளவரசர் மொகமது பின் சல்மான், பீபா அமைப்பின் தலைவர் ஜியான்னி இன்பாண்டினோ ஆகியோர் கண்டுகளித்தனர்.இன்று நடைபெறும் லீக் போட்டிகளில் எகிப்து – உருகுவே, மொராக்கோ – ஈரான், போர்ட்டுகல் – ஸ்பெயின் அணிகள் மோதவுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.