ஐக்கிய தேசியக்கட்சிக்கு தாவுகின்றார் சுத்து மாத்து சுமந்திரன் -போட்டுடைத்த சிங்கள எம்.பி

0

தேசியப்பட்டியல் மூலம் பின்கதவால் உள்நுழைந்து இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அளவுக்கு வளர்ந்து இருப்பவர் சுமந்திரன் .தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் என்று சொல்லப்பட்டாலும் அவர் பெயரளவிலான தலைவர் மட்டுமே .கட்சியின் முக்கிய முடிவுகளை எடுப்பது சுமந்திரன் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் .மூத்த அரசியல்வாதி மாவையை கூட அடக்கி வைத்திருப்பவர் தான் இந்த சுமந்திரன் .

மகிந்தவின் ஆட்சி காலத்தில் மகிந்தவின் செல்லப்பிள்ளையாக இருந்தவர் சுமந்திரன் .அவருடைய சொந்த வீடு ஐக்கிய தேசிய கட்சி .ஒருமுறை சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சுமந்திரனை பார்த்து ” நான் மகிந்தவின் வீட்டில் நிற்கின்ற நேரத்தை விட நீங்கள் தானே அதிக நேரம் நிற்க்கின்ரீர்கள்” என்று கூறினார் .இதில் இருந்தே புரிய வேண்டும் சுமந்திரன் யார் என்று .ஆனால் சுமந்திரன் ஒரு நல்ல மனிதர் சிறந்த தமிழ் தேசியவாதி என்னும் ஒரு போலியான தோற்றப்பாட்டினை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்படுத்தியுள்ளது .சுமந்திரன் யார் என்பதற்கு ஓர் நாள் காலம் பதில் சொல்லும் .

சுமந்திரன் யார் என்பதை சிறிது நிரூபிக்கும் படியாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா செய்தி ஒன்றினை கக்கியுள்ளார் .சுமந்திரன் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராவது உறுதி என அவர் தெரிவித்துள்ளார் .

அண்மையில் இடம்பெற்ற ஜனநாயக மக்கள் காங்கிரசின் வன்னி மாவட்ட தலைமை பணிமனையை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா இது குறித்து கருத்து கருத்து தெரிவித்தார் .சுமந்திரன் தமிழரசுக் கட்சியை, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறார்.நான் ஒரு சாஸ்திரகாரன் அல்ல.எனினும் எதிர்வரும் தேர்தலில் சுமந்திரன் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகவே பங்கு கொள்வார் என்பதை உறுதியாக கூற முடியும் என்று தெரிவித்துள்ளார் .

சுமந்திரன் இருக்க வேண்டிய உண்மையான இடம் ஐக்கியதேசிய கட்சி தான் .ஆகவே இதில் ஆச்சரியப்படுவதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை . சுமந்திரன் தொடர்ந்து தமிழ் தேசிய காட்ச்சியில் இருப்பாரேயானால் தமிழ் தேசிய கூட்டமைப்பினையும் தமிழரசு கட்சியையும் அடியோடு அழித்து விடுவார் என்பதில் சந்தேகம் இல்லை .தமிழரசு கட்சி என்பது ஒரு பழம் பெரும் ஆலமரம் .அதனை அழித்து விடுவதில் சிங்கள பேரினவாதிகள் குறியாக உள்ளனர் .அதற்கு ஓர் ஆயுதமாகவே சுமந்திரனை அனுப்பி உள்ளார்கள் என்பது அரசியல் தெரிந்தவர்களுக்கு புரியும் .புரியாதவர்களுக்கு காலம் பதில் சொல்லும் .

Leave A Reply

Your email address will not be published.