ஒருவழியாக காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான உறுப்பினரை அறிவித்தது கர்நாடகா

0

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டும் அதற்கான உறுப்பினரை கர்நாடகா நியமிக்காதது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அது தொடர்பான அறிவிப்பை அம்மாநில முதல்வர் குமாரசாமி வெளியிட்டுள்ளார். #CauveryIssue

ஒருவழியாக காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான உறுப்பினரை அறிவித்தது கர்நாடகா
பெங்களூரு:

சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்த ஆணையத்துக்கான உறுப்பினர்களை தமிழக அரசு நியமித்தது. மத்திய அரசும் ஆணைய தலைவர் மற்றும் பிரதிநிதிகளை நியமித்தது.

ஆனால், இதற்கான உறுப்பினர்களை நியமிக்காமல் கர்நாடக அரசு இழுத்தடித்து வந்தது. மேலும், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அவசியம் என அம்மாநில முதல்வர் குமாரசாமி முட்டுக்கட்டை போட்டு வந்தார். இந்நிலையில், ஆணையத்தின் கர்நாடக உறுப்பினராக அம்மாநில நீர்வளத்துறை செயலாளர் ராஜேஷ்சிங்கை நியமித்து முதல்வர் அறிவித்துள்ளார்.

மேலும், காவிரி ஒழுங்காற்று குழுவின் உறுப்பினராக பிரசன்னாவை நியமித்துள்ளார். ஆணையம் அமைக்கப்பட்டது தொடர்பாக விவாதிக்க 3 நாட்களில் அனைத்துக்கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனவும், இந்த கூட்டத்தில் கர்நாடக மாநில எம்.பி.க்கள் கலந்து கொள்வார்கள் என்றும் குமாரசாமி இன்று தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.