கடவுளின் வாகனத்தை களவாடிய களவாணிகள் ! யாழ்.கரவெட்டியில் சம்பவம்

0

கரணவாய் வடக்கு கரவெட்டியில் உள்ள சக்களாவத்தை ஞான வைரவர் ஆலயத்தின் குதிரை வாகனத்தை இனம் தெரியாத நபர்கள் களவாடி சென்றுள்ளார்கள் . 17-06-2018 அன்று இந்த சம்பவம் இடம்பெறுள்ளது.

இந்த குதிரை வாகனத்தை குறைந்தது 8 தொடக்கம் 10 பேர் வரை காவமுடியும் என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

அதிகாலை நேரம் கன்டர் ரக வாகனத்தில் வந்தவர்கள் குதிரை வாகனத்தை கன்டரில் ஏற்றிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

அண்மைய காலங்களில் யாழ்ப்பாணத்தில் இருந்து சில பழமை வாய்ந்த பாரம்பரியமாக பாதுகாக்கப்பட்டு வந்த பொருட்கள் தென்பகுதிகளுக்கு கடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

யாழ் குடாவை விட்டு களவாடிய குதிரை வாகனத்தினை வெளியே கொண்டு செல்ல கடல் மார்க்கமும் சங்குப்பிட்டி, ஆனையிறவு தரை வழிப்பாதையும் மட்டுமே உள்ளது.

இது தொடர்பாக ஏதாவது தகவல் தெரிந்தவர்கள் பொலிசாருக்கு தகவல் வழங்குமாறு ஆலய நிர்வாகத்தினர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
களவாடப்பட்ட குதிரை வாகனம் பல வருடங்கள் பழமை வாய்ந்த வாகனம் என்று தெரிவிக்கப்படுகின்றது .

சில அடையாளங்கள் மட்டுமே தமிழ் இனத்துக்கென்று எஞ்சியிருக்கும் நிலையில் இந்த திருட்டு சம்பவம் மக்களை கவலையடைய செய்துள்ளது .தமிழர்களின் பழமை வாய்ந்த பாரம்பரிய அடையாளங்களை இல்லாது ஒழிக்கும் பொருட்டு பேரினவாதிகளால் ஏவப்பட்ட விசமிகள் தான் இந்த களவினை மேற்கொண்டு இருக்க வேண்டும் என்று மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.