ஈழத்தைச் சேர்ந்த அபிசா யோகரத்தினம் என்ற யுவதி கனடாவில் உயரிய சாதனையொன்றினை படைத்து தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார் .கனடா ரொரன்றோவின் முன்னணி வைத்தியசாலைகளை உள்ளடக்கிய University Health Network எனப்படும் உலக முதன்மை மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் அதியுயர் பாராட்டினையும் அதன் நிர்வாகசபை உறுப்பினர் பதவியையும் அபிசா பெற்றுள்ளார் .
அபிசா யோகரத்தினம் தனது முதற்பட்டப்படிப்பில் முதன்மை தேர்ச்சி பெற்று அதனூடாக மருத்துவக்கல்விக்கான வாய்ப்பை ரொரன்றோ பல்கலைக்கழகத்தில் பெற்று அதன் முதல் ஆண்டிலேயே மீண்டும் முதன்மை நிலையை எய்தி அதியுயர் விருதைப் பெற்றுள்ளார்.அது மட்டுமல்ல தனது ஆராச்சிகளினூடாக ரொரன்ரோவின் முன்னணி வைத்தியசாலைகளை உள்ளடக்கிய யூனிவசிற்றி கெல்த் நெற்வேக் எனப்படும் உலக முதன்மை மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் அதியுயர் பாராட்டைப் பெற்று அதன் நிர்வாகசபை உறுப்பினர் பதவியையும் தனதாக்கியுள்ளார்.
ஈழத்து பெண்கள் உலக நாடுகளில் சாதித்து வருவது பெருமைக்குரியது .பெண்களால் ஆண்களுக்கு நிகராக எதனையும் சாதிக்க முடியும் என்பதற்கு அபிசா ஓர் சிறந்த உதாரணம் .