காணாமல் போனோருக்கான அலுவலகத்திற்கு முல்லையில் எதிர்ப்பு!

0

சற்றுமுன்னர் முல்லைத்தீவு கரைத்துரைப்பற்று பிரதேச செயலகத்திற்கு முன்பாக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட காணாமல் போனோருக்கான ஆணைக்குழுவின் அலுவலகம் அமைப்பதற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

காணாமல் போனோருக்கான அலுவலகத்தை ஏற்றுக்கொள்ளவில்லை ஜெனிவா தீர்மானத்திற்கு இவ்வலுவலகம் எதிரானது எனும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வட கிழக்கு பகுதிகளில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இவ்வார்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை காணாமல் போனோர்(OMP) அலுவலகத்தின் அமர்வு இன்று (2) முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெற்றது.

இன்றுகாலை முதல் இந்த அமர்வு காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் மற்றும் நிமல்க்கா பெர்னாண்டோ ஜெயதீபா புண்ணியமூர்த்தி கணபதிப்பிள்ளை வேந்தன் எஸ் லியனகே மிராக் ரகீம் மொகென்ரி பீரிஸ் உள்ளிட்ட ஆணையாளர்கள் கலந்துகொண்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் கருத்துக்களை கேட்டறிந்து கொண்டதோடு காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் பணிகள் தொடர்பில் விளக்கத்தையும் வழங்கியிருந்தனர்.

குறித்த சந்திப்பில் சுமார் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் 40 பேர் வரை கலந்துகொண்டு சாட்சியங்களை வழங்கியிருந்தனர்.

இந்நிலையில் இந்த அலுவலகம் எமக்கு தேவையில்லை எனவும் இதில் தமக்கு நம்பிக்கஈல்லை எனவும் தெரிவித்து இந்த அலுவலகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் காணாமல் ஆக்கபப்ட்டவர்களின் உறவுகள் சுமார் 250 க்கும் அதிகமானவர்கள் காலை 8.30 தொடக்கம் மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து கவனஈர்ப்பில் ஈடுபட்ட காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவுகளை சந்தித்த காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் ஆணையாளர்கள் தமது அலுவலகத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கம் அளித்ததோடு காணாமல் ஆக்கபட்ட்வர்களின் உறவுகளின் கருத்துக்களையும் கேட்டறிந்துகொண்டனர்.

இதில் கவனஈர்ப்பில் ஈடுபட்டவர்களின் உறவுகளால் காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் ஆணையாளர்களிடம் காணாமல் ஆக்கபட்டவர்கள் தொடர்பான விபரங்களை விரைவில் வெளியிடுமாறும் தம்மால் ஜனாதிபதியிடம் தெரிவிக்கபட்ட கோரிக்கைகளான காணாமல் ஆக்கபட்ட்வர்களின் விபரங்களை வெளியிடுதல் ,அவர்கள் தடுத்துவைக்கபட்டுள்ள இடங்களை வெளிப்படுத்துதல் என்பனவற்றை முதர்கட்டமாக் மேற்கொள்ளுமாறும் அதன்பின்னரே இந்த அலுவலகத்தை தாம் நம்புவதா இல்லையா என தாம் தீர்மானிப்பதாகவும் தெரிவித்தனர்.

இதற்க்கு பதில் வெளியிட்ட காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் தலைவர் இன்னும் ஓரிரு மாதங்களில் தாம் காணாமல் ஆக்கபட்டவர்கள் தொடர்பான விபரங்களை வெளியிடுவதாக உறுதிபட தெரிவித்ததோடு இந்த வாக்குறுதியை எழுத்துமூலமும் வழங்க தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து சிவில் சமூக அமைப்புகளுடனும் காணாமல் போநோருக்கான் அலுவலகத்தினர் சந்திப்பில் ஈடுபட்டிருந்தனர்

Leave A Reply

Your email address will not be published.