பொதுபலசேனா என்னும் ரவுடிக்கும்பலின் தலைவர் ஞானசார தேரர் அண்மையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் .ஊடகவியலாளர் ஒருவரின் மனைவியை அச்சுறுத்திய வழக்கில் ஒரு வருட சிறைத்தண்டனை நீதிமன்றினால் வழங்கப்பட்டது .எனிலும் சிறையில் அடைக்கப்பட்ட ஐந்து நாட்களில் பிணையில் வெளியில் வந்து விட்டார் .
தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது தன்னை காற்சட்டை அணிய வேண்டும் என்று சிறைக்காவலர்கள் வற்புறுத்திய போதும் தான் அணியவில்லை என்று தெரிவித்துள்ளார் .மேலும் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஐந்து நாட்களும் காவி உடையை கழற்றி வைத்து விட்டு சாரமும் ஷேர்ட்டும் அணிந்ததாக ஞானசார தேரர் தெரிவித்துள்ளார் .