அண்மையில் கிளிநொச்சி காட்டுப்பகுதிக்கு அண்மையில் அமைந்திருக்கும் விசுவமடு கிராமத்தில் சிறுத்தை ஒன்று புகுந்து பொதுமக்களை தாக்கியதை தொடர்ந்து அதை மக்கள் அடித்துக் கொலை செய்திருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சிறுத்தையை கொலை செய்த 6 பேர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.இந்தச் சிறுத்தை விவகாரம் சமூகவலைத்தளங்களில் பரவலான பேசுபொருளாக சில நாட்களாக இருந்து வருகின்றது.
ஏன் சிறுத்தை ஊருக்குள் வந்தது அதை ஏன் மக்கள் தாக்க முற்பட்டார்கள் என்பதற்கான உண்மை நிலவரம் தற்போது வெளிவந்திருக்கிறது.அதாவது இரணைமடு காட்டுக்குள் இலங்கை இராணுவத்தினர் சீன அரசாங்கம் வழங்கிய 12000 பொருத்து வீடுகளை நிர்மானித்து வருகிறது.அதனால் பெரியளவில் காடுகளை அழித்து உள்ளனர். இதனால் காட்டு விலங்குகள் கிராமங்களை நோக்கிப் படையெடுக்கின்றன.
அதைவிட இன்னொரு விடயம் ஊர் மக்களால் பேசப்படுகிறது காடுகளை அண்டியுள்ள கிராம மக்களை அந்த இடங்களில் இருந்து எழுப்பி துரத்துவதற்காக இராணுவம் காட்டுக்குள் இருக்கும் விலங்குகளை அச்சுறுத்தல் மூலம் தூண்டிவிடுகிறார்கள்” என்று கூறப்படுகின்றது.
மேலும் தமிழ் பிரதேசங்களை சிங்கள மயமாக்கும் தீவிர முயற்சியின் ஒரு பகுதி தான் இந்த வனவிலங்குகளை ஊருக்குள் விரட்டி மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துதல் என சந்தேகங்கள் வெளியாகியுள்ளது.
அண்மைக்காலமாக தென்பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட மதம் பிடித்த யானைகளை வடக்கு காடுகளில் விடப்பட்டுள்ளது அவை தமிழர்களின் விவசாய நிலங்களை அழித்து வருகின்றது.இப்படியாக வனவிலங்குகளை அச்சுறுத்தல் மூலம் தூண்டிவிட்டு அவற்றை மக்களின் குடியிருப்புக்களை நோக்கி செல்ல வைத்து அங்கிருக்கும் மக்களை அந்த பிரதேசங்களில் இருந்து துரத்தியடிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என்று தெரியவருகிறது.
தமிழ் இனத்தின் மீது கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பின் ஒரு பகுதியாகவே இந்த விடயங்களையும் அவதானிக்கபட வேண்டியுள்ளது.