கிளிநொச்சி பரவிபாஞ்சானில் மீட்கப்பட்ட வெடி பொருட்கள் யாருடையவை?

0

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் தனியார் காணியில் உள்ள கிணற்றிலிருந்து வெடி பொருட்கள் மற்றும் வெடி மருந்துகள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த காணியின் உரிமையாளர் தனது கிணற்றினை நேற்றுமுதல் துப்பரவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதன்போது குறித்த கிணற்றிலிருந்து வெடிபொருட்கள் மற்றும் பெட்டிகளில் அடைக்கப்பட்ட வெடி மருந்துகள் என மீட்கப்பட்டு வருகின்றன.

மிகவும் ஆழமான குறித்த கிணற்றில் நேற்றும் இன்றும் பெருமளவான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இப் பிரதேசம் விடுதலை புலிகளின் முக்கிய பிரதேசமாக பேசப்பட்டு வந்ததுடன், நீண்டகாலமாக படையினர் குறித்த பகுதியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

தொடர்ந்தும் மக்கள் போராட்டம் மேற்கொண்டதை அடுத்து படிப்படியாக குறித்த பகுதிகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு மக்கள் குடியேறி வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த கிணற்றிலிருந்து வெடி பொருட்கள் மற்றும் வெடிமருந்துகள் அடைக்கப்பட்ட பெட்டிகள் என மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கதாகும்.

விடுதலைப் புலிகள் இப் பிரதேசத்தை சமாதான மற்றும் அரசியல் அலுவலகங்களுக்காகவே பயன்படுத்தியிருந்தனர். எனவே இராணுவத்தினர் அப் பகுதியில் மக்கள் இடையூறுகளை விளைவிக்கவே அவ்வாறு வெடிபொருட்களை இட்டுள்ளதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.