புதிதாக பிறந்துள்ள தனது குழந்தையை பார்ப்பதற்காக இலங்கை அணியின் தற்போதைய தலை சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரும் ,முன்னாள் இலங்கை அணியின் தலைவருமாகிய அஞ்சலோ மத்தியூஸ் இன்று இரவு மேற்கிந்திய தீவில் இருந்து இலங்கையை வந்தடையவுள்ளார் .
இலங்கை அணி மேற்கிந்தியத்தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது .ஏற்கனவே இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி மேற்கிந்திய தீவுகள் அணியிடம் படுதோல்வி அடைந்தது.
இந்நிலையில் அஞ்சலோ மத்தியூஸ் புதிதாக பிறந்துள்ள தனது இரண்டாவது குழந்தையை பார்ப்பதற்காக நாடு திரும்புவதால் இலங்கை அணிக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளார்கள் .அஞ்சலோ மதியூஸின்இடத்தினை டானுஷ்க குணதிலக நிரப்புவார் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது