எதிர்க்கட்சி தலைவர் பதவி ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருக்கே வழங்கப்பட வேண்டுமெனவும் அவர்களே முழு நாட்டினதும் எதிர்க்கட்சியை போன்று செயற்படுவதாகவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நெத் எப்.எம். வானோலியின் அன்லிமிட்டட் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பாக கருத்து கூறும் போதே மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக சம்பந்தன் இருக்கின்றார். இந்த பதவியை ஏற்றதன் மூலம் இவர் தெற்கு மக்களுக்கு சிறந்த செய்தியொன்றை தெரிவித்துள்ளார். வேறு நாடு என்ற நிலைப்பாட்டை கைவிட்டோம் , பாராளுமன்றத்தின் மூலமாகவே தீர்வு காண முயற்சிக்கின்றோம். என அவர் சிறந்த செய்தியொன்றை கூறியுள்ளார். ஆனால் செயற்பாட்டில் அவர் முழு நாட்டுக்கும் உரிய எதிர்க்கட்சி தலைவர் அல்ல, உண்மையில் எதிர்க்கட்சி தலைவர் பதவி ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருக்கே வழங்கப்பட வேண்டும். இதுவே எனது நிலைப்பாடு.
நாட்டின் எதிர்க்கட்சியினராக அவர்களே செயற்படுகின்றனர். இதனை சம்பந்தன் செய்வதில்லை. வடக்கு கிழக்கு என்பதனற்குள் இருந்து செயற்படும் கட்சி தலைவர் என்ற ரீதியிலான செயற்பாட்டிலேயே அவர் ஈடுபட்டுள்ளார் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.