வடக்கு மாகாண முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் எழுதிய நீதியரசர் பேசுகின்றார் என்னும் நூல் வெளியீட்டு விழா நேற்றையதினம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது .இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் , தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள் . தமிழ் தேசிய கூட்டமைப்பு தவிர்ந்த ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்று இருந்தார்கள் .
இந்நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் விக்னேஸ்வரன் கொடுத்த கையை கடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை என்று கூறியிருந்தார் .இதன் மூலம் தன்னை முதலமைச்சராக களமிறக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் அதன் தலைவர் சம்பந்தனுக்கும் தான் விசுவாசமாக இருக்கின்றேன் என்று முதலமைச்சர் கூறியிருந்தாலும் அவர் மறைமுகமாக இன்னொரு விடயத்தினையும் ஆணித்தரமாக தனது அதே கூற்றின் மூலம் கூறியிருக்கின்றார் .
அதாவது தனக்கு வாக்களித்து தானை முதலமைச்சராக தேர்வு செய்த மக்களின் கையை கடிக்க முடியாது , கொடுத்த வாக்குறுதிகளை மாற்ற முடியாது என மறைமுகமாக சம்பந்தருக்கு விக்னேஸ்வரன் அவர்கள் தகுந்த பதிலடியை வழங்கியுள்ளார் .