சாதனை படைத்த மெர்சல் ! சந்தோசத்தில் விஜய் ரசிகர்கள்

0

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம் ஹமெர்சல்’. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான இந்த படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் உலகம் முழுக்க வெளியானது.

விஜய் இந்த படத்தில் மூன்று தோற்றத்தில் நடித்திருந்தார். விஜய் ஜோடியாக நித்யா மேனன்இ சமந்தாஇ காஜல் அகர்வால் நடித்திருந்தனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

படம் துவங்கியது முதலே மெர்சல் குறித்து புதுப்புது தகவல்கள், ட்விட்டர் எமோஜி என பல்வேறு தகவல்களை படக்குழு சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கியது. படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக ஹஆளப்போறான் தமிழன்’ பாடல் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது.

இந்த நிலையில், மெர்சல் படம் இந்திய அளவில் ட்விட்டரில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. கடந்த ஆண்டு ட்விட்டரில் அதிகளவில் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக்குகளில் மெர்சல் முதலிடத்தை பிடித்துள்ளதாக ட்விட்டர் இந்தியா நிறுவனம் சார்பில் நேற்று நடைபெற்ற சூவணக்கம்ட்விட்டர் நிகழ்ச்சியில் இந்தியாவிற்கான ட்விட்டர் அமைப்பின் தலைவர் தரன்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.