சிங்கப்பூரில் ஒரே நேர்கோட்டில் சந்தித்துக்கொண்ட உக்கிரமான இரு துருவங்கள்

0

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களுக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் அவர்களுக்கும் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு சிங்கப்பூரில் இன்று காலை இடம்பெற்றுள்ளது .

சிங்கப்பூரில் உள்ள செந்தோசாவின் கபேலோ உல்லாச நட்சத்திர ஹோட்டலில் இன்று காலை 9 மணியளவில் அமெரிக்க மற்றும் வடகொரிய அதிபர்களுக்கு இடையிலான சந்திப்பு இடம்பெற்றது . இரு நாட்டு அதிபர்களும் ஒருவருக்கொருவர் கைலாகு கொடுத்து நல்லெண்ணத்தை வெளிப்படுத்தினார்கள் .10 வினாடிகள் வரை இந்த கைலாகு சமாச்சாரம் நீடித்தது .

அதன் பின்னர் இரு நாட்டு அதிபர்களும் சுமார் 45 நிமிடங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் .இந்த பேச்சு வார்த்தையில் அணு ஆயுத ஒழிப்பு மற்றும் வடகொரியா மீதான பொருளாதார தடை நீக்கம் பற்றி இரு நாட்டு அதிபர்களும் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது .

வடகொரியா மற்றும் அமெரிக்க ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் நீண்ட காலமாக இடம்பெற்று வரும் பனிப்போர் இன்றைய சந்திப்பின் மூலம் முடிவுக்கு வருமா அல்லது மேலும் உக்கிரம் அடையுமா என்ற பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .

Leave A Reply

Your email address will not be published.