சிங்களக் குடியேற்றத்திற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் போராட்டம்!

0

வடமராட்சி கிழக்கில் அத்துமீறி சட்ட விரோத கடல் தொழிலில் ஈடுபட்டு வருகின்ற சிங்கள மீனவர்களை வெளியேற்றக் கோரி மாபெரும் பேரணியொன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளதுயாழ் மாவட்ட கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் இன்று காலை இந்த பேரணி நடைபெற்றது.

யாழ் பிரதான வீதியிலுள்ள சமாச முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பேரணி, பிரதான வீதியூடாக யாழ் மாவட்டச் செயலகத்தை சென்று நிறைவடைந்தது.பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்துகின்ற தெற்கு மீனவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டுமெனக் கோரி மாவட்ட அரச அதிபரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது

Leave A Reply

Your email address will not be published.