நாட்டில் சிங்கள இனம் மெது மெதுவாக அழிந்து கொண்டு போகிறது. மக்கள் தொகை குறைவடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஒரு குடும்பத்தில் ஆகக்கூடினால் 2 அல்லது 3 குழந்தைகளே தற்காலத்தில் விரும்பப்படுகின்றனர். இதனால் எதிர்காலத்தில் மக்கள் தொகை வீழ்ச்சியடையும்.
ஒரு காலத்தில் சராசரியாக ஒவ்வொரு குடும்பத்திலும் 9-10 குழந்தைகள் இருந்தனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த இவ்வாறு நாடகம் ஆடுகிறார். ஆனால், ஈழத் தமிழ் மக்களை பல லட்சம் கொன்று குவித்தது சிங்கள அரசுகள். ராஜபக்ச சுமார் இரண்டு லட்சம் மக்களை அழித்து மிக மிக சிறுபான்மையினராக்கினார். தற்போதும் ஈழ மக்கள் இனவிருத்தியில் 3ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.