சிறுத்தைப் புலியை கொலை செய்தவர்களுக்கு எதிராக விசாரணை நடவடிக்கை ஆரம்பம்!

0

கிளிநொச்சியில் சிறுத்தை அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ்பேச்சாளர் ருவான் குணசேகர இதனை தெரிவித்துள்ளார். கிளிநொச்சி நீதிமன்றத்தின் உத்தரவிற்கு ஏற்ப நாங்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் சமூகஊடகங்களில் வெளியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கிளிநொச்சி பொலிஸார் விசாரணைக்கு பயன்படுத்தி வருகின்றனர் என பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சிறுத்தை விவகாரத்துடன் தொடர்புடையவர்களை அடையாளம் காணும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்,என தெரிவித்துள்ள பொலிஸ்பேச்சாளர் சிறுத்தையை தாக்கியவர்களை அடையாளம் காண்பதற்காக கிராமசேவையாளர்களின் உதவியை நாடியுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்களை விரைவில் நாங்கள் கைதுசெய்வோம் எனவும் பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்

Leave A Reply

Your email address will not be published.