ஜப்பானில் நிலநடுக்கம் ! மூவர் பலி ! 350 க்கும் அதிகமானோர் காயம்

ஜப்பானில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது .ஜப்பானின் மேற்கு பகுதியில் உள்ள ஒசாகா பகுதியில் தான் நிலநடுக்கம் ஏற்பட்டது .6.1 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது
இன்று காலை ஒசாகோ, கியோடாவை தாக்கிய இந்த நிலநடுக்கத்தில் ஆக குறைந்தது மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 350 க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு தேசிய ஒளிபரப்பு நிலையமான NHK செய்தி வெளியிட்டுள்ளது
நிலநடுக்கத்தால், வீடுகள் லேசாக குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர். ஜப்பானின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
