தமிழின விடுதலைக்காக அல்லும் பகலும் அயராது போராடிய முன்னாள் போராளியின் இன்றைய பரிதாப நிலை

0

தாயக மண்மீதிப்பு போராட்டத்தில் தமிழ் மக்களுக்காக அல்லும் பகலும் அயராது உழைத்த முன்னாள் போராளிகள் பலர் தமது வாழ்வாதாரத்தினை முன்னெடுத்து செல்ல முடியாமல் வறுமையில் வாடுகின்றனர் .

மட்டக்களப்பு – வவுணதீவு, கரவெட்டியாறு பகுதியை சேர்ந்தவர் திலீபன் .இவர் ஒரு முன்னாள் போராளி .தாயக மண் மீட்பு போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டு பல களங்களை கண்ட ஓர் வீரன் .திலீபன் என்கிற வடிவேல் தில்லையம்பலம் 1990ஆம் ஆண்டு தன்னை விடுதலை போராட்டத்தில் இணைத்துக்கொண்டவர் .

தற்போது 48 வயதினை எட்டியுள்ள திலீபன் இடுப்புக்கு கீழ் இயங்க முடியாத நிலையில் படுக்கையிலேயே தன் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றார் .திலீபன் தற்போது தனது வயது முதிர்ந்த தாயாரின் பராமரிப்பில் தான் வாழ்ந்து வருகின்றார் .திலீபனின் அப்பாவும் வயது முதிர்ந்தவர்.நடக்க முடியாத நிலையில் உள்ள தந்தையையும் திலீபனின் வயது முதிர்ந்த தாயார் தான் பராமரித்து வருகின்றார் .

இது தொடர்பில் திலீபனின் தாயார் கூறுகையில், எனது மகனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பராமரிக்க ஒருவரும் இல்லாத நிலையில் தொடர்ந்தும் படுத்த படுக்கையாகவே உள்ளார்.

சக்கர நாற்காலி மற்றும் மலசலகூட வசதிகள் எதுவும் இல்லாதிருப்பதால் திலீபனை பராமரிப்பதிலும் பல சிரமங்கள் காணப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்,

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது தனது மூத்த மகனை பறிகொடுத்த திலீபன் தனக்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் மிகுந்த வறுமையான சூழலில் வாழ்ந்து வருகின்றார் .மிகுந்த கஷ்டத்தின் மத்தியில் வைத்திய உதவிகள் இன்றி இருக்கும் திலீபனை காப்பாற்றி அவருக்கு மறுவாழ்வளிக்க முன்வர வேண்டுமென அவரது தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.

அன்பான உறவுகளே .சிங்கள பௌத்த பேரினவாதிகளுக்கு எதிரான தாயக மண் மீட்ப்பு போராட்டத்தில் பங்கு பற்றிய வீர போராளிகள் இன்று மிகவும் நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் .அவர்கள் யாருக்காக போராடினார்கள் ?யாருக்காக தமது அவயங்களை இழந்து விழுப்புண் அடைந்தார்கள் ?சற்று நேரம் சிந்தித்து பாருங்கள் .அன்று நாம் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காக தமது ஆசாபாசங்களை துறந்து வெய்யிலிலும் மழையிலும் எமக்காக உழைத்த வீர புலிகளை இன்று இந்த நிலையில் விடலாமா ?எமக்காக தமது இளம் பாராயத்தினை அர்பணித்தவர்களை கவனிக்க வேண்டியது எமது கடமையல்லவா .

போரினால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தினை உறுதிப்படுத்துவதற்கு அனைத்து தமிழர்களும் முன் வர வேண்டும் .அத்துடன் வறுமையான சூழலில் படுக்கையில் தனது காலத்தை கழிக்கும் திலீபனுக்கு அடிப்படை வசதிகளையும் மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுக்க முன்வருமாறு ஈழம் நியூஸ் இணைய குழுமம் உங்கள் பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றது .

Leave A Reply

Your email address will not be published.