வடக்கில் இராணுவம் சிவில் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என வடக்கு மாகாண சபையும், யாழ்.நகரில் சிவில் நடவடிக்கையில் இராணுவம் ஈடுபட கூடாது என யாழ்.மாநகர சபையும் தீர்மானம் ஒன்றை இறுதியாக நடைபெற்ற அமர்வுகளின் போது நிறைவேற்றியிருந்தன.
ஆனால் இந்த தீர்மானத்தை மீறும் அல்லது அவமதிக்கும் வகையில் வடக்கு மாகாண ஆளுநரால் நிகழ்வொன்று இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. அதில் இந்த இரு சபைகளின் முதல்வர்களும் கலந்து கொண்டு சிறிலங்கா இராணுவத்துடன் இணைந்து மரங்களை நாட்டுகின்றனர்.
தமிழர்களுடைய தாய் மண் தொடர்ச்சியாக அபகரிக்கப்பட்டுக்கொண்டு இருக்கும் வேளை இவ்வாறான இராணுவமயமாக்கலும் தொடருகின்றது.
தமிழர் மண்ணில் சிங்களக் குடியேற்றம் இராணுவ ஆதரவோடு நடத்தப்படுகிறது. இந்து மதக் கோவில்கள் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் புத்த விகாரைகள் கட்டப்படுகின்றன. சிங்களவர் ஒருவர் கூட வாழாத இடத்திலும் புத்த விகாரைகள் கட்டியெழுப்பப் படுகின்றன. உதாரணத்திற்கு வடக்கு – கிழக்கை இராணுவ ஆட்சி மூலம் அடிமைப் படுத்தும் சிறிலங்கா அரசின் அடிப்படை நோக்கம் பளிச்சென்று தெரிகிறது. இன விகிதாசரத்தை மாற்றி அமைக்கும் ஆயுதமாகச் சிங்களக் குடியேற்றமும் புத்த மதக் கோவில்களும் பயன்படுத்தப் படுகின்றன.
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.

Prev Post