தமிழீழ தேசிய மிருகத்தை கொலை செய்து தேசியத்தலைவரை அவமதித்த காட்டுமிராண்டிகள் – காணொளி உள்ளே

0

சிறுத்தை புலியை அடித்து கொலை செய்த இரக்கமற்ற சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது .வனஜீவராசி அதிகாரிகளை தாக்கியதன் காரணமாகவே இந்த சிறுத்தை அடித்து கொலை செய்யப்பட்டுள்ளது .

வனஜீவராசி அதிகாரிகளை தாக்கியதற்காக அடித்து தான் கொலை செய்ய வேண்டுமா ? மயக்க ஊசி அடித்து சிறுத்தையை பிடித்திருக்க முடியும் .அல்லது பொறி வைத்து பிடித்திருக்க முடியும் .வாய் பேசா பிராணியை இவ்வாறு கொடுமை படுத்தி கொலை செய்வது காட்டுமிராண்டித்தனமானது என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர் .

விடுதலை புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் சிறுத்தை புலிகள் மீது அதீத ஆர்வமும் அன்பும் உடையவர் .சிறுத்தை புலிகளை அன்போடு வளர்த்து வந்தவர் என்பதனை நாம் பல புகைப்படங்களில் பார்த்திருக்கின்றோம் .தலைவர் பிரபாகரனின் புனித ஆட்சி இடம்பெற்ற கிளிநொச்சி மண்ணில் சிறுத்தை புலியை அடித்து கொலை செய்தமை கவலைக்குரியது .சிறுத்தை புலி இலங்கையில் அரிதாக காணப்படும் விலங்கு என்பது குறிப்பிடத்தக்கது .

Leave A Reply

Your email address will not be published.