தமிழ்நாட்டினையும் கர்நாடகாவையும் இணைத்த சிம்பு! குவியும் பாராட்டு- காணொளி உள்ளே

0

காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையில் நீண்ட காலமாக பிரச்சனை இடம்பெற்று வருகின்றது .இதுவரையில் தீர்க்கப்படாத பிரச்சனையாக இருந்துவரும் காவிரி நீர் பிரச்சனையை நடிகர் சிம்பு வித்தியாசமான கோணத்தில் அணுகி காணொளி ஒன்றினை வெளியிட்டு இருந்தார் .அந்த காணொளி கர்நாடக மக்களின் மனசாட்சியை தட்டியெழுப்பியது .

காவிரி பிரச்சனை தொடர்பாக சிம்பு தெரிவித்த கருத்துக்களை புரிந்து கொண்ட கர்நாடக மக்கள் காவிரியில் உள்ள தமிழர்களுக்கு டம்ப்ளர் மற்றும் போத்தல்களில் தண்ணீர் வழங்கி தமது அன்பினையும் நல்லெண்ணத்தையும் வெளிப்படுத்தினார்கள். சிம்புவின் உணர்வினை மதிப்பளித்து கர்நாடகாவை சேர்ந்த தாய் ஒருவர் சிம்புவிக்கு பரிசு பொதி ஒன்றினையும் அனுப்பி வைத்துள்ளார் .அதில் ஒரு போத்தல் தண்ணீரையும் அனுப்பி தனது அன்பினை வெளிப்படுத்தியுள்ளார் .அந்த பரிசு பொதி தொலைக்காட்சி நடன நிகழ்வில் சிம்புவிடம் கையளிக்கப்பட்டுள்ளது .

காவிரி நீர் பிரச்சனையை வித்தியாசமான முறையில் அணுகி அதனை கர்நாடக மக்கள் புரிந்துகொள்ளுபடி செய்த சிம்புவுக்கு பல தரப்பிலும் இருந்து பாராட்டு மழை பொழிந்து வருகின்றது .

Dance Jodi Dance 2.O Grand Finale

காவேரி விவகாரத்தை வேறு கோணத்தில் அணுகி, அதில் வெற்றிகண்ட STR அவர்களுக்கு ஒரு சமர்ப்பணம்!டான்ஸ் ஜோடி டான்ஸ் 2 .O Grand Finale #ZeeTamil #DanceJodiDance2PointO #DJD2PointO #DJDGrandFinale #ஜீதமிழ்

Slået op af Zee Tamil i 14. juni 2018

Leave A Reply

Your email address will not be published.