தாயகம் திரும்பிய ஐந்து அகதிகள் வடக்கு கடலில் கைது

0

தமிழ்நாட்டில் இருந்து படகு மூலம் நாடு திரும்பிய மேலும் 5 அகதிகளும், இரண்டு படகோட்டிகளும்,நேற்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

காங்கேசன்துறைக்கு வடக்கே 11 கடல் மைல் தொலைவில் சந்தேகத்துக்குரிய கண்ணாடியிழைப் படகு ஒன்றை கடற்படையின் அதிவேக தாக்குதல் படகு ஒன்று வழி மறித்து சோதனையிட்டது.

அந்தப் படகில் இரண்டு பெண்கள், ஒரு சிறுவன் மற்றும் நான்கு ஆண்கள் இருந்தனர். அவர்களில் ஐவர் தமிழ் நாட்டில் இருந்து நாடு திரும்பிய அகதிகளாவர். ஏனைய இருவரும் படகோட்டிகள்.

கைது செய்யப்பட்ட ஏழு பேரும், காங்கேசன்துறை கடற்படைத் தளத்துக்கு அழைத்து வரப்பட்டு, மருத்துவ சோதனைகளுக்குப் பின்னர் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.