தாயாரின் மரண வீட்டில் மரணித்த மகன் !சோகத்தில் நடந்த சோகம் -காணொளி உள்ளே

0

தனது தாயாரின் மரண சடங்கு இடம்பெற்ற அதே நாளில் மகனும் மரணித்த சம்பவம் இந்தோனேசியாவில் இடம்பெற்றுள்ளது .இந்தோனேசியாவில் சுலாவேசி தீவை சேர்ந்தவர் சமேன் கோண்டுரா .இவருக்கு வயது 40 .இவரது தாயார் மரணம் அடைந்துவிட்டார். எனவே அவரது இறுதிசடங்கு வடக்கு டோரஜா மாவட்டத்தில் பரின்டிங் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்தது.

தாயாரின் உடலை சவப் பெட்டியில் வைத்து அதை மூங்கில் ஏணியில் தூக்கி சென்றனர். அப்போது அப்பெட்டி தவறி கீழே விழுந்தது.அப்போது முன்புறம் சென்று கொண்டிருந்த சமேன் கோண்டோரா மீது சவப்பெட்டி விழுந்து நசுக்கியது. அதனால் படுகாயம் அடைந்த அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் மகனை காப்பாற்ற முடியவில்லை . தனது தாயின் இறுதிசடங்கு முடியும் முன்பே அவர் பரிதாபமாக இறந்துள்ளார் .

Leave A Reply

Your email address will not be published.