திருமண ஆடம்பர செலவை குறைத்து பாடசாலைக்கு மைதானம் அமைத்துக்கொடுத்த மணமகன்

0

திருமணம் என்பது வாழ்க்கையில் இடம்பெறும் நிகழ்வுகளில் மிகவும் முக்கியமானது .திருமணத்தை ஒவ்வொருவரும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றது போல செய்வார்கள் . இன்றைய உலகில் பெரும்பாலோனோர் திருமண நிகழ்வை ஆடம்பரமான ஒரு நிகழ்வாகவே செய்து வருகின்றனர்.தம்மிடம் பணம் இல்லாவிடிலும் கடனுக்கு பணத்தினை வாங்கியாவது திருமணத்தை ஆடம்பரமாக செய்பவர்கள் அதிகம்.

கடலுக்கடியில் திருமணம் , வானில் பறந்து கொண்டு திருமணம் என்று பலவேறு ஆடம்பர , வினோதமான திருமணங்களை பார்த்திருப்பீர்கள் ,கேள்விப்பட்டிருப்பீர்கள் .ஆனால் இவையனைத்துக்கும் மாறாக ஒரு இளைஞன் ஆடம்பர செலவுகளை குறைத்து தனது திருமணத்தை வித்தியாசமான முறையில் செய்துள்ளார் .

அஹுன்கல்ல, பத்திரஜாகம என்னும் கிராமத்தினை சேர்ந்தவர் மஞ்சுள பிரதீப்.இவர் அண்மையில் தனது காதலியை கரம்பிடித்துள்ளார் .கொழும்பில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் மஞ்சுள பிரதீப் தனது திருமணத்தை ஆடம்பர செலவுகளை குறைத்து நடத்தியுள்ளார் .ஆடம்பர செலவுகளை குறைத்ததன் மூலம் கிடைத்த பணத்தினை தான் படித்த பாடசாலைக்கு மைதான அரங்கு கட்டுவதற்கு செலவழித்துள்ளார்.

திருமண தினத்தன்று மணமக்கள் இருவரும் சேர்ந்து இந்த மைதான அரங்கத்தை திறந்து வைத்துள்ளனர்.மஞ்சுளா பிரதீப்பின் இந்த செயற்பாட்டினை பலரும் பாராட்டியுள்ளனர் .குடியும் கும்மாளமும் நிறைந்த ஆடம்பர திருமணத்தினை நடத்து இன்றையகால இளைஞர்களுக்கு மஞ்சுள பிரதீப் ஓர் முன்னுதாரணமாக திகழ்கின்றார் .

Leave A Reply

Your email address will not be published.