கடலில் நங்கூரமிடப்பட்ட கப்பலொன்று தீப்பற்றிய சம்பவம் இடம்பெற்றுள்ளது .மயிலிட்டி துறைமுகத்துக்கு அண்மையில் தான் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இன்று அதிகாலை ஒரு மணியளவில் கப்பல் தீப்பற்றியதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.திருத்த வேலை காரணமாக கடந்த ஒரு வருடமாக குறித்த கப்பல் அந்தப் பகுதியில் நங்கூரம் இடப்பட்டிருந்தது. திடீரென்று கப்பலின் இயந்திரப் பகுதி கடுமையாக தீப்பற்றி எரிய ஆரம்பித்தது கப்பலில் டீசல் தாங்கிகள் உள்ளதால் தீ தொடர்ந்து பற்றி எரிகிறது எனத் தெரிவிக்கப்படுகிறது.
கப்பல் தொடர்ந்து எரிந்து கொண்டிருப்பதனால் கப்பல் வெடிக்கும் அபாயத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.கடற்படை தீ அணைக்கும் பிரிவினர் தீயை கட்டுப்பட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த போதும் அது கைகூடவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது .