நல்லாட்சியில் பங்கயமாக ஜொலிப்பாரா அங்கயன் ?

0

நாடாளுமன்ற உறுப்பினரும் சிறிலங்கா சுதந்திர கட்சின் யாழ் மாவட்ட அமைப்பாளருமாகிய அங்கயன் ராமநாதன் நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதி அமைச்சராக இன்று பதவியேற்றுள்ளார் .

நல்லாட்சி என்று அழைக்கப்படும் நரியாட்சியில் மேலும் இரண்டு ஸ்டேட் அமைச்சர்களும் ஐந்து பிரதி அமைச்சர்களும் இன்று புதிதாக பதவிப்பிரமாணம் செய்துள்ளனர் . நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் ராமநாதன் விவசாயத்துறை பிரதி அமைச்சராக பதவியேற்றுள்ளார் .

நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலின் போது தேர்தல் பிரச்சாரம் இடம்பெற்ற வேளை விடுதலைப்புலிகளின் எழுச்சி பாடல்களை அங்கயன் ஒலிபரப்பி மக்களின் மனங்களை கவரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார் .எனிலும் அவரின் வலையில் தமிழ் மக்கள் சிக்கவில்லை.

விடுதலைப்புலிகளை இதயபூர்வமாக நேசிக்கும் எவரும் சிங்கள பௌத்த பேரினவாதிகள் அரசாங்கத்தில் அமைச்சு பதவியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் . விடுதலைப்புலிகளின் எழுச்சி பாடல்களை தனது சுய அரசியல் இலாபத்திற்காக அங்கயன் ஒலிபரப்பி விட்டு இப்போது நல்லாட்சியில் அமைச்சராக பதவியேற்றுள்ளமையானது அங்கயனின் உண்மையான முகத்தினை தெட்ட தெளிவாக காட்டியுள்ளது .

எனிலும் தமிழ் மக்கள் இன்று வரை முழுமையாக நம்பும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரசுடன் இணைந்து தமிழ் மக்களின் ஒட்டுமொத்த அபிலாசைகளை அடகு வைத்து கைப்பொம்மையாக, கையாலாகாத சகபாடிகளாக இருந்து வரும் நிலையில் அங்கயன் அமைச்சராக பதவியேற்று இதய சுத்தியுடன் மக்களுக்கு நல்ல காரியங்கள் செய்தால் அதனை வரவேற்கலாம் என்று மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர் .

Leave A Reply

Your email address will not be published.