நீட் தேர்வில் தமிழகம் 39.55 சதவீத தேர்ச்சி – கீர்த்தனா முதலிடம்

0

நீட் தேர்வில் தமிழகம் 39.55 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த கீர்த்தனா என்ற மாணவி 12-வது இடத்தைப் பிடித்துள்ளார். #NEET #NEET2018

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. நீட் தேர்வு முடிவுகள cbseresults.nic.in என்ற தளத்தில் சி.பி.எஸ்.இ. வெளியிடப்பட்டது.

720 மதிப்பெண்களுக்கு நீட் தேர்வு நடத்தப்பட்டது. இதில் 691 மதிப்பெண் எடுத்து கல்பனா குமாரி தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அவர் இயற்பியலில் 180-க்கு 171, வேதியியலில் 180-க்கு 160, உயிரியல், விலங்கியலில் 360-க்கு 360 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.

நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் வெளியானது

தமிழகத்தில் இருந்து 114602 பேர் நீட் தேர்வு எழுதியிருந்தனர். இவர்களில் 45336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 39.55 சதவீத தேர்ச்சி ஆகும். தமிழகத்தில் கீர்த்தனா என்ற மாணவி 676 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இந்திய அளவில் இவர் 12-வது இடத்தைப் பிடித்துள்ளார். #NEET #NEET2018
மே 6-ம் தேதி நடைபெற்ற மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வு முடிவுகள் மதியம் 2 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே வெளியிடப்பட்டது. #NEET #NEET2018

நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வாக நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அறிவிக்கப்பட்ட நாள் முதல் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலும் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு கிளப்பியது.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான மருத்துவ நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 6-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்தியா முழுவதும் சுமார் 13 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். தமிழகத்தில் மட்டும் சுமார் 1.07 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

வினாத்தாள் குளறுபடி காரணமாக தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் சங்கல்ப் என்ற அமைப்பு மனு தாக்கல் செய்தது. இந்த மனு இன்று அவசர வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடையில்லை என்று தீர்ப்பளித்தனர்.

இதையடுத்து, 2 மணிக்கு வெளியாக வேண்டிய தேர்வு முடிவுகள், முன்னதாகவே வெளியாகியுள்ளது. மாணவர்கள் www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் சென்று நீட் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். #NEET #NEET2018

Leave A Reply

Your email address will not be published.