மட்டக்களப்பு பனிச்சங்கேணியில் சிறிலங்கா படையினரால் பாடசாலை மாணவிகளான இரு சிறுமிகள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பனிச்சங்கேணி பாடசாலை மாணவிகள் இருவரே இவ்வாறு பாலியல் வன்புணர்விற்குள்ளாகியுள்ளனர். கடந்த 18 ம் திகதி குறித்த சிங்கள சிப்பாய்கள் மட்டக்களப்பில் இரண்டு தமிழ் பாடசாலை மாணவிகளை கடத்திச்சென்று கொடூரமாக பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் பதின்மூன்று மற்றும் பதினைந்து வயதினை உடையவர்களென தெரியவருகின்றது.இதனிடையே இந்த சம்பவம் தொடர்பில் இராணுவத்தின் அதிகாரிகள், சிங்கள இராணுவ சிப்பாய்களை முன்னிறுத்தக்கூடாதென பாதிக்கப்பட்ட சிறுமிகளது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை இராணுவத்தினர் அச்சுறுத்திவருகின்றனர் எனவும் அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த சிறுமிகள் பள்ளிக்கு சென்று திரும்புகையில் கடத்தப்பட்டுள்ளனர். குழந்தைகள் தேடி வந்த கிராமவாசிகள் மாலை 6 மணியளவில் அவர்களை கண்டுபிடித்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.மாணவிகளது பள்ளி மற்றும் மருத்துவமனை ஆகியவை சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளன.