பாவமன்னிப்பு கேட்டு வந்த பெண்ணை பங்கு போட்டு பாவச் செயல் புரிந்த 5 பங்கு தந்தையர்கள் !

0

பாவமன்னிப்பு கேட்டு வந்த திருமணம் முடித்த பெண்ணை பாதிரிகள் 5 பேர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய மனதை உலுக்கும் சம்பவம் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது .

குறித்த பெண்ணுக்கு திருமணத்திற்கு முன்பு கிறிஸ்தவ பாதிரியார் ஒருவருடன் தொடர்பு இருந்துள்ளது . திருமணம் முடித்த பின் தான் செய்த தவறினை உணர்ந்து கொண்ட இரண்டு குழந்தைகளுக்கு தாயான இந்த பெண் பாவ மன்னிப்பு கேட்பதற்காக பிறிதொரு பாதிரியாரிடம் சென்றுள்ளார்

பாவ மன்னிப்பு கேட்க வந்த பெண்ணின் திருமணத்திற்கு முன்னரான வாழ்க்கையில் நடந்த கதையை கேட்ட பாதிரியார் ,நீ எனக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் திருமணத்திற்கு முன்னர் உனக்கு பாதிரியாருடன் இருந்த தொடர்பை அப்படியே உன் கணவரிடம் சொல்லி விடுவேன் என மிரட்டியுள்ளார் .

திருமணத்திற்கு முன்பு இருந்த தொடர்பு தனது கணவருக்கு தெரிந்தால் தனது கணவர் தன்னை விவாகரத்து செய்து விடுவார் என்ற அச்சத்தில் குறித்த பெண் வேறு வழியில்லாமல் பாதிரியாருடன் ஒத்துழைத்துள்ளார் .

பாவ மன்னிப்பு கொடுக்க வேண்டிய பாதிரியார் குறித்த பெண்ணை அனுபவித்தது மட்டுமல்லாமல் தன் சக பாதிரிகள் 6 பேருக்கும் பெண்ணின் படுக்கையை பங்கிட்டு கொடுத்து ஈனச் செயல் புரிந்துள்ளார் .

இந்த 5 பேரில் 5 வது பாதிரியார் பெண்ணை அனுபவிப்பதற்காக டில்லியில் இருந்து அவசரமாக கேரளா வந்து அங்கு ஒரு லாட்ஜில் தங்கி அப்பெண்ணை வரவழைத்துள்ளார் .பாதிரியார்களின் மிரட்டலுக்கு அடி பணிந்த அப்பாவி பெண் வேறு வழியின்று அங்கு சென்றுள்ளார் . பெண்ணிடம் படுக்கையை பகிர்ந்த 5 வது பாதிரியார் அந்த பெண்ணின் டெபிட் கார்ட் மூலம் லாட்ஜ்
வாடகையையும் செலுத்தியுள்ளார் .

பெண்ணின் கடன் அட்டையில் இருந்து பணம் செலுத்தப்பட்டமைக்கான தகவல் பெண்ணின் கணவரது மொபைலுக்கு குறுஞ்செய்தியாக கிடைத்தது .அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர் தனது மனைவியை கேட்ட போது தனக்கு நடந்த கொடுமையை மனைவி உளறியுள்ளார் .

மனைவி கூறியதை கேட்டு மேலும் அதிர்ச்சியடைந்த புருஷன் மனைவியை வெளுத்து விரட்டி வீட்டை விட்டு அனுப்பியுள்ளார் .தற்போது அந்த பெண் தனது வாழ்க்கையை இழந்து நடுத்தெருவில் உள்ளார் . சமுதாயத்திற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய பங்கு தந்தையர்கள் பாவ மன்னிப்பு கேட்டு வந்த பெண்ணை பங்கு போட்டு ஈன செயல் புரிந்தமை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது .

 

Leave A Reply

Your email address will not be published.