பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடாவடி பண்ணிய மும்தாஜ் ! ஆடிப்போன சக பிரபலங்கள்

0

நேற்று இரவு ஒளிபரப்பாகிய ”பிக் பாஸ்” வீட்டிற்குள் மும்தாஜ் போராட்டம் நடத்தியுள்ளார்.

அதாவது, ”பிக் பாஸ்” வீட்டில் எஜமானர் டாஸ்க் போய்க் கொண்டிருக்கிறது. பெண்கள் அனைவரும் ஆண்களை ஐயா என்று அழைத்து அவர்கள் சொல்லும் வேலைகள் அனைத்தையும் செய்ய வேண்டும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மகத் ஆடும் ஆட்டம் பார்வையாளர்களுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.

பணிப்பெண்களாக இருக்கும் பெண் போட்டியாளர்கள் பிக் பாஸ் கொடுக்கும் சேலையை அணிந்து கொண்டு தான் வேலை பார்க்க வேண்டும். அவர்கள் தங்குவதற்கு கூட மெத்தை இல்லாத கட்டில் போட்ட அறை அளிக்கப்பட்டுள்ளது.

மும்தாஜ்ஜை தவிர மற்ற பெண் போட்டியாளர்கள் பாத்ரூமில் சேலை கட்டிவிட்டு வந்தார்கள். பாத்ரூம் ஈரமாக இருப்பதால் தன்னால் அங்கு சேலை கட்ட முடியாது என்று மும்தாஜ் கூறினார்.

மேலும், பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் இருக்கும் பாத்ரூமை திறந்துவிடுமாறு மும்தாஜ் பிக் பாஸிடம் கேட்டார். அதற்கு பிக் பாஸ் பதில் சொல்லாததால் மும்தாஜ் தனது மைக்கை கழற்றி வைத்துவிட்டார்.

அதுமட்டுமல்லாமல், ”மும்தாஜ் உங்களின் மைக்கை எடுத்து மாட்டுங்க” என்று பிக் பாஸ் கூறியும் மும்தாஜ் கேட்கவில்லை. அத்துடன், ”உங்களுடன் பேச வேண்டும் இல்லை என்றால் பாத்ரூமை திறந்துவிடுங்க. இதில் ஏதாவது ஒன்று நடக்கும் வரை மைக்கை மாட்ட மாட்டேன்” என்று அடம்பிடிக்கிறார் மும்தாஜ்.

கேப்டன் நித்யா சொன்னதால் மும்தாஜ் சேலை கட்டினார். ஆனால் மைக்கை மாட்ட மாட்டேன் என்றார். அது என்ன மும்தாஜ் மட்டும் ஒய்யாரமா..? என சக போட்டியாளர்கள் அங்கு பேசியுள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.