உலக நாடுகளில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்வான பிக்பாஸ் என்று அழைக்கப்படும் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியை கடந்த வருடம் விஜய் டிவி நடாத்தியிருந்தது .நம்ம உலகநாயகன் கமல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார் .இந்நிகழ்ச்சியில் தமிழ் நாட்டினை சேர்ந்த பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு லூட்டி அடித்தனர் .
கடந்த வருடம் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவரது மனங்களிலும் இடம்பித்தவர் யார் என்றால் அது நடிகை ஓவியா தான் . சினிமாவில் ஓவியாவுக்கு கிடைக்காத பெயரும் புகழும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்தது .ஓவியா ஆர்மி என்னும் ஒரு படையை உருவாக்கி ரசிகர்கள் ஓவியாவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள் .பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடையும் வரை சமூக வலைத்தளங்களில் ஓவியா தொடர்பான பதிவுகள் நிரம்பி வழிந்தது .
இவ்வருடம் ஆரம்பமாக உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் ஓவியா கலந்து கொள்ள இருக்கின்றார் .மீண்டும் கமல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார் .ஓவியா மறுபடியும் கலந்து கொள்வதனால் நிகழ்ச்சி களை கட்டும் என்பதில் சந்தேகம் இல்லை .ஓவியாவை கொண்டாடுவதற்கு இப்போதே ஓவியா ஆர்மி தயாராகி விட்டதாம் .