புளியம்பொக்கணை சந்தியை அண்மித்த பகுதியில் வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள கரைச்சி கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான காணி ஒன்றில் பாவணையற்ற மலசலகூட குழி ஒன்றில் இவ்வாறு வெடிபொருட்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயம் தொடர்பில் தர்மபுரம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. குறித்த குழியில் மோட்டார் செல்கள், கைக்குண்டுகள் என பல்வேறு வகையான வெடிபொருட்கள் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த வெடிபொருட்களை அகற்றவது மற்றும் செயலிழக்க செய்வது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மன்றின் அனுமதியுடன் விசேட அதிரடிப்படையினரின் உதவுயுடன் தற்பொழுது மேற்கொண்டு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும். பொலிசார் தெரிவிக்கின்றனர்.