தனியார் மருத்துவ நிலையமொன்றில் பணிபுரியும் பெண்ணிடம் வைத்தியரொருவர் பாலியல் சேஷ்டை புரிந்த சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது .
குறித்த பெண் வவுனியா நகரில் உள்ள தனியார் மருத்துவ நிலையமொன்றில் பணிபுரிந்து வருகின்றார்.இவர் வவுனியா நெளுக்குளம் இராசேந்திரகுளம் பிரதான வீதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனைக்கு தினசரி நோயாளிகளின் மருத்துவ அறிக்கைகளை கொண்டு சென்று வழங்குவது வழக்கம் .
கடந்த வெள்ளிக்கிழமை மாலை மருத்துவ அறிக்கைகளை இந்தப்பெண் எடுத்து சென்ற போது மருத்துவமனையில் பணியில் இருந்த வைத்தியர் பெண்ணிடம் தவறான முறையில் நடந்துள்ளதுடன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் .அதனையடுத்து குறித்த பெண் அங்கிருத்து தப்பித்து வீட்டிற்கு சென்றுள்ளார்.
தனக்கு நேர்ந்த கொடுமையை பயத்தினால் இந்தப்பெண் தனது வீட்டாருக்கு தெரிவிக்கவில்லை .பாலியல் தொந்தரவு செய்தது மட்டுமல்லாமல் குறித்த தனியார் மருத்துவமனையின் வைத்தியர் பெண்ணிற்கு குறுந்தகவல் மூலம் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.இதனால் மேலும் அச்சமடைந்த பெண் வைத்தியர் தன்னிடம் தவறாக நடக்க முற்பட்ட சம்பவத்தினை பெற்றோரிடம் போட்டு உடைத்துள்ளார் .
தமது மகளுக்கு நேர்ந்த சம்பவத்தினால் கொதிப்படைந்த பெற்றோர் நே்றிரவு 10.00 மணியளவில் அப்பெண்ணை அழைத்து சென்று வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர் .
வைத்தியரினால் பாலியல் தொந்தரவுக்குள்ளாகிய பெண் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .குறித்த வைத்தியர் இதற்கு முன்னரும் பாலியல் ரீதியான திருவிளையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக அறியமுடிகின்றது . வைத்தியரினை கைது செய்வதற்கு வவுனியா பொலிஸார் வலை விரித்துள்ளார்கள் .