பொட்டு அம்மான் உயிருடன் உள்ளார் ! பயத்தில் உறைந்துள்ள சிங்கள பேரினவாதிகள்

0

இலங்கையில் 2009 இல் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டது .சிங்கள பௌத்த பேரினவாத அரசுடன் முப்பது வருடகாலமாக நீடித்த விடுதலை போராட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் முற்றுப்பெற்றதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது .இறுதி யுத்தத்தில் வீரச்சாவினை தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலை புலிகளின் இராணுவ தளபதிகளின் உடல்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பி விடுதலைப்புலிகளை முற்றாக அழித்து விட்டதாக சிங்கள ஏகாதிபத்தியம் கொக்கரித்தது.

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் வீரச்சாவினை அணைத்துக்கொண்ட தமிழீழ இராணுவ தளபதிகள் அனைவரினதும் உடல்களை சிங்கள இராணுவம் கைப்பற்றியிருந்தபோதும் ஒருவரின் உடல் மட்டும் பேரினவாதிகளின் கைகளில் சிக்கவில்லை .அவர் தான் பொட்டு அம்மான் .”பொட்டு அம்மான்” இந்த பெயரினை கேட்டாலே போதும் சிங்கள இராணுவம் நின்ற இடத்தில் சிறுநீர் கழித்து விடுவார்கள் .தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் ஒரு கையாக இருந்தவர் பொட்டம்மான் .தலைவர் பிரபாகரனின் நிழலாக திகழ்ந்தவர் தான் இந்த பொட்டம்மான் . பொட்டு உயிருடன் இருக்கும் வரை எனக்கு எதுவும் நிகழ்ந்து விடாது என்று தலைவர் கூறியுள்ளார் .அதில் இருந்தே தெரிய வேண்டும் பொட்டு அம்மான் என்றால் யார் ?அவர் எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்தவர் என்று .

விடுதலை புலிகளின் மூளை என்று சிங்கள இராணுவத்தினால் அழைக்கப்படும் பொட்டு அம்மன் 2009 இல் முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற இறுதி சமரில் இலங்கை இராணுவத்துக்கு கண்ணில் மண்ணை தூவி விட்டு கடல் தாண்டி பயணித்ததாக அப்போதே தெரிவிக்கப்பட்டது .பொட்டு அம்மானுடன் கூடவே தலைவர் பிரபாகரனும் சென்றதாக பரவலாக பேசப்பட்டது .தலைவர் பிரபாகரனின் உடல் போன்ற ஒரு உடலை மோர்ப் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கி இது தான் பிரபாகரனின் இறந்த உடல் என்று இலங்கை அரசு சிங்களவர்களை முட்டாள் ஆக்கியிருந்தது .ஆனாலும் பொட்டு அம்மான் விடயத்தில் இலங்கை அரசு மௌனம் காத்தது .பொட்டு அம்மான் உயிருடன் உள்ளாரா என்ற சந்தேகத்தினை இலங்கை அரசின் மௌனம் மேலும் வலுவாக்கியது.

பொட்டு அம்மான் தலைமையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலனாய்வு அமைப்பு மீண்டும் இயங்குகிறது என 2 ஆண்டுகளுக்கு முன்னர் சர்வதேச போலீஸ் அமைப்பான இண்டர்போல் எச்சரிக்கையும் விடுத்திருந்தது.இண்டர்போல் அமைப்பின் தேடப்படுவோர் பட்டியலில் பொட்டு அம்மான் இருந்து வருகின்றார் .

பொட்டு அம்மான் தொடர்பாக 9 வருடமாக நீடித்த மர்மத்துக்கு இப்போது உறுதியான விடை கிடைத்துள்ளது .பாஜகவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி பொட்டு அம்மான் உயிருடன் உள்ளார் என்பதனை உறுதிப்படுத்தும் வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார் .ராஜீவ் கொலையின் தலைமை சதிகாரர் இத்தாலியில் இருக்கிறார் என்று சுப்ரமணியசுவாமி தெரிவித்துள்ளார் .ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தேடப்படும் நபர்களில் பொட்டு அம்மான் முக்கியமானவர் என்பது குறிப்பிட தக்கது .

சுப்பிரமணியசுவாமி தொடர்ச்சியாக விடுதலைப்புலிகளை விமர்சித்து வரும் ஒருவர் . ராஜீவ் கொலையின் தலைமை சதிகாரர் இத்தாலியில் இருக்கிறார் என்று எதிரியே கூறுகின்றான் என்றால் அது நிச்சயமாக உண்மையான உறுதிப்படுத்தப்பட்ட தகவலாக தான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .

பொட்டு அம்மான் உயிருடன் உள்ளார் என்று சுப்பிரமணிய சுவாமி உறுதிப்படுத்தியிருப்பது சிங்கள பேரினவாதிகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது .தனியொருவராக விடுதலை போராட்டத்தினை மீளவும் கட்டியெழுப்புவதற்குரிய அத்தனை தகைமையும் உடையவர் பொட்டு அம்மான் என்பது சிங்கள பேரினவாதிகளுக்கு நன்றாக தெரியும் .முள்ளிவாய்க்கால் என்பது விடுதலை போராட்டத்தின் முற்றுப்புள்ளியா அல்லது அடுத்த கட்ட ஈழப்போருக்கான இடைவேளையா என்ற கேள்விக்கு காலம் பதில் சொல்லும் .

Leave A Reply

Your email address will not be published.