போரில் பாதிக்கப்பட்ட சிறார்களின் முகத்தில் புன்னகையை வரவழைத்த பிரான்ஸ் பல்கலைக்கழக மாணவர்கள்

0

போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் முகமாக பிரான்ஸ் பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

பிரான்ஸ் பல்கலைக்கழக மாணவர்கள் IOSF (Institut D optique sans frontieres) என்ற மனித நேய அமைப்பை உருவாக்கி அதன் மூலமாக பல்வேறு மனிதநேயம் மிக்க சேவைகளை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த மாணவர்களின் குழுவில் இலங்கையைச் சேர்ந்த Don Jayamanne என்ற சிங்கள மாணவர் ஒருவரும் Birunthan Sivasiri என்ற தமிழ் மாணவர் ஒருவரும் உள்ளடங்குகின்றனர்.

இந்த மாணவர் குழு வடக்கு கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை தேடி சென்று அவர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் உற்சாகத்தை தரக்கூடிய செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர் .இதன் ஒரு கட்டமாக கிளிநொச்சி(மகாதேவா சிறுவர் இல்லம்), முல்லைத்தீவு(இனிய வாழ்வு இல்லம்), வவுனியா மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் போரில் தாய் தந்தையை இழந்த சிறுவர்களை சந்தித்து அவர்களுடன் அன்பாக பழகி அவர்களை அரவணைத்து அவர்களது மனங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றார்கள் .

போரினால் பாதிக்கப்பட்ட தாய் தந்தையை இழந்த சிறுவர்கள் பலர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர் . ஆகவே இந்த சிறார்களுக்கு அன்பும் அரவணைப்பும் அடிப்படை தேவைகளில் ஒன்றாக உள்ளது . உளவியல் ரீதியாக பாதிக்கப்ட்டுள்ள சிறுவர்களுக்கு பிரான்ஸ் பொறியியல் பீட மாணவர்கள் மேற்கொண்டுவரும் செயல் பாராட்டப்படவேண்டியது .

Leave A Reply

Your email address will not be published.