12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிஞ்சில் வெம்பிய 14,15 வயது சிறுவர்கள் கைது

0

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள மாங்கேணி பாம் கொலனி பிரதேசத்தில் 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 14 மற்றும் 15 வயது சிறுவர்கள் இருவரை இன்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் கடந்த 12 ம் திகதி ஆடுகளை மேய்க்கச் சென்ற 12 வயது சிறுமியை பின்தொடர்ந்து சென்ற அதே பிரதேசத்தை சேர்ந்த குறித்த சிறுவர்கள் சனநடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி பயம் காரணமாக தனக்கு ஏற்பட்ட விபரீத நிலை தொடர்பாக வெளியில் தெரிவிக்காமல் இருந்து வந்துள்ள நிலையில், நேற்று வியாழக்கிழமை தெரிவித்ததையடுத்து உறவினர்கள் உடனடியாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் சந்தேகத்தின் பேரில் 14 மற்றும் 15 வயதுடைய இரு சிறுவர்களை கைது செய்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சிறுவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.