படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினாவுக்கு நீதி கோரியும், போதைப்பொருளுக்கு எதிராகவும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழ வளாகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
இதில் ஏராளமான பல்கலை மாணவர்கள் கலந்துகொண்டதுடன், பல வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
“காவல்துறையே நித்திரையா? காவல்துறையும் கயவர்களுடனா? வளரும் பயிரை முளையிலே கிள்ளாதே, காவல்துறையா கஞ்சா துறையா? என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியிருக்கின்றனர்.
மேலும் குறித்த மாணவர்கள் தற்போது இராமநாதன் வீதி, பரமேஸ்வரா வீதி என மூன்று பிரதான பாதைகளை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.