மாவீரன் பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்!

0

தமிழீழ இன விடுதலைக்காக ஈழத்தில் முதன் முதலில் சயனைட் அருந்தி தன்னை மாய்த்துக் கொண்ட மாவீரன் பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு நாளை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணம் உரும்பிராயில் உள்ள பொன் சிவகுமரன் நினைவிடத்திலேயே இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

ஜூன் 5 1974இல் பொன் சிவகுமாரன் வீரமரணம் அடைந்தார். தமிழ் மக்களின் உரிமைக்காக பல்வேறு போராட்டச் செயல்களைப் புரிந்த சிவகுமாரன் பிற்கால ஈழ விடுதலைப் போராட்ட எண்ணத்திற்கும் இயக்கங்களுக்கும் வழிகாட்டியாக செயற்பட்டார். இவரது 44ஆவது நினைவு தினம் நாளை ஆகும்.

இந்த நிகழ்வில் அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள், முன்னாள் போராளிகள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் நிகழ்வு ஏற்பட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். யுத்தம் நிறைவடைந்த பின்னர் முதன் முதலில் பகிரங்மான முறையில் சிவகுமாரன் நினைவுகூரப்படுவது இதுவே முதற்தடவையாகும்.

Leave A Reply

Your email address will not be published.