யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட்ட ஆறு வயதுடைய சிறுமி றெஜினாவுக்கு நீதிகோரி சுழிபுரப் பகுதியில் தற்போது ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது .இதில் கலந்து கொண்டுள்ள மக்கள் மீண்டும் தலைவர் பிரபாகரன் வருவார் என்று கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது விசேட செய்தியாளர் சற்று முன் தெரிவித்துள்ளார் ..
கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில், முச்சக்கர வண்டிச் சங்கத்தினர், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் , பொது மக்கள் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் இணைந்துள்ளனர்.
வருவான் பிரபாகரன், மீண்டும் வருவான் பிரபாகரன் ” என்ற கோஷத்தை எழுப்பியவாறு சங்கானை பிரதேச செயலரிடம் மனு கையளிப்பதற்காக ஆர்ப்பாட்டக்காரர்கள் சென்று கொண்டிருப்பதாகவும் அறிய முடிகின்றது .
விடுதலைப்புலிகளின் காலத்தில் மக்கள் முழுமையான பாதுகாப்புடன் வாழ்ந்தார்கள் .சிறுவர் துஷ்பிரயோகம் , வன்புணர்வு என்பன அறவே இல்லாத நிலை இருந்தது .ஆங்காங்கே ஓரிரு சம்பவங்கள் இடம்பெற்றாலும் உடனடியாக மக்கள் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு நீதி காப்பாற்றப்பட்டது .ஆனால் இன்று யாழ்ப்பாணத்தில் கொலைகள் , சிறுவர் துஷ்பிரயோகங்கள் , வன்புணர்வுகள் தலை விரித்தாடுகின்றது .இந்நிலையில் தலைவர் பிரபாகரன் அவர்களினால் மட்டுமே தமக்கான பாதுகாப்பினை முழுமையாக உறுதிப்படுத்த முடியும் என்று மக்கள் தங்கள் ஆதங்கத்தினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.