முதன் முதலாக இலங்கை விமானப்படையில் பெண் விமானிகள் இணைப்பு

0

இலங்கை விமானப்படை வரலாற்றில் முதன்முறையாக பெண் விமானிகள் சேர்க்கப்பட்டுள்ளனர் .ஜயனி தத்சரனி ஹேவாவித்தாரன, பவித்ரா லக்ஷானி குணரத்ன, பியுமி நிமல்கி ஜயரத்ன மற்றும் ரஞ்கனா வீரவர்தன ஆகிய பெண்களே விமானிகளாக அவதாரம் எடுத்துள்ளனர் .

இந்த நான்கு பெண் விமானிகளும் திருகோணமலை சீன துறைமுகத்தில் விமான பயிற்சிகளை பெற்று வருகின்றனர் .பயிற்சி முடிவடைந்ததும் விமானிகளாக தமது பணியினை ஆரம்பிக்கவுள்ளார்கள் .

தெற்காசியாவில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய 3 நாடுகளில் மட்டுமே பெண் விமானிகள் உள்ளனர் .இந்த வரிசையில் இப்போது இலங்கையும் இணையவுள்ளது .பெண் விமானிகளை இணைத்து கொள்ளும் நாடுகளின் பட்டியலில் தெற்காசியாவில் இலங்கை முன்னணியில் இருக்கின்றதாம் .ஆண்களுக்கு நிகராக பெண்களும் இலங்கையில் சாதிக்க தொடங்கியுள்ளமையை பலரும் பாராட்டியுள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.